ETV Bharat / city

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை! - எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றிலிருந்து 73% பேரும், சென்னையில் மட்டும் 84.5% பேரும் குணமடைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

meet
meet
author img

By

Published : Jul 29, 2020, 3:09 PM IST

ஜூலை 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்தும், பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்தார்.

அப்போது கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ”தமிழ்நாட்டில் இதுவரை 24.7 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 15,000 மருத்துவப் பணியாளர்கள் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். களப்பணியில் உள்ள பணியாளர்களுக்கு சிங்க் மற்றும் சத்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மாநகராட்சி மூலம் 46 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றியிருந்து தமிழ்நாடு முழுவதும் இதுவரை 73% பேரும், 84.5% பேர் சென்னையிலும் குணமடைந்துள்ளனர். மேலும், முற்றிலுமாக இந்த வைரசிலிருந்து விடுபட, அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் “ என்றார்.

இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய் , பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: எழுவர் விடுதலை தாமதம் ஏன்? உயர் நீதிமன்றத்தில் ஆளுநரின் பதிலை கூறிய தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.