ETV Bharat / city

ரூ.477 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் - நகராட்சி நிர்வாகம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.477.42 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Chief Minister MK Stalin
Chief Minister MK Stalin
author img

By

Published : Aug 30, 2021, 4:43 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட்.30) தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் 477 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான முடிவற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில்,

  • வேலூர் மாநகராட்சிப் பகுதிகளுக்கு 234 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டம்
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி, தாத்தையங்கார்பேட்டை, துறையூர், உப்பிலியாபுரம் ஒன்றியங்களுக்குட்பட்ட 293 குடியிருப்புகளுக்கு 140 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்
  • கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைப் பேரூராட்சி, ஊத்தங்கரை ஒன்றியத்திற்குட்பட்ட 50 குடியிருப்புகளுக்கு 28 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்
  • மதுரை மாநகராட்சியின் புதுமண்டபத்திலிருந்து ஏழு கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றி அமைக்கப்பட்ட கடைகள்.
  • திருமலை நாயக்கர் மஹாலில் மூன்று கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிரானைட் இருக்கைகள், புல்வெளிப் பரப்பு, கருங்கல் நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட சுற்றுப்புறப் பூங்கா.

உலகத்தில் நடக்காததையா ராகவன் செய்துவிட்டார் - சீமான்

  • மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புராதன வழித்தடத்தில் 14 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி விளக்குகளுடன் கூடிய அலங்கார விளக்குகள்
  • மதுரை மாநகராட்சியின் பழைய நகரப் பகுதிகளில் 30 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாற்றியமைக்கப்பட்ட எல் இ.டி தெரு விளக்குகள்.
  • சேலம் மாநகராட்சி கோட்டை பழைய மார்க்கெட் சாலையில் ஐந்து கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகம், உடற்பயிற்சிக்கூடம்
  • எட்டு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீர்மிகு சாலையாக மாற்றியமைக்கப்பட்ட சீத்தாராமன் சாலை
  • ஐந்து கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கிருஷ்ணா ராஜேந்திர சத்திரம் என மொத்தம் 477 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.