சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக மக்கள் துணிப்பைகளை பயன்படுத்தவும், ஊக்குவிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு மீண்டும் மஞ்சப்பை என்னும் பரப்புரையை தொடங்க உள்ளது.
இதற்காக தமிழ்நாடு காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை நாளை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். எனவே மக்கள் துணிப்பைகளை உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு மீனவர்கள் 68 பேரை விடுவிக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்