ETV Bharat / city

ரூ.1000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை தொடங்கி வைத்த முதலமைச்சர்! - ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கள் பரிசுத் தொகுப்பை முதலமைச்சர் தொடக்கி வைப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடக்கி வைத்தார்.

cm
cm
author img

By

Published : Nov 29, 2019, 11:48 AM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆயிரம் ரூபாய் ரொக்கம், பொங்கல் தயாரிக்கும் பொருட்களான பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவை விலையில்லாமல் வழங்கப்படுகின்றன. 2019ஆம் ஆண்டு பொங்கலுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலம், கரும்பு துண்டு ஆகியவற்றுடன், ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டன. இவை, அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது முதல் முறையாக அனைத்து அட்டைகளுக்கும் வழங்குவதாக அரசு அறிவித்தது.

வசதி படைத்தவர்களுக்குப் பணம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனால், எந்தப் பொருட்களும் பெறாத, 45 ஆயிரம் அட்டைதாரர்கள் தவிர, அரிசி, சர்க்கரை பெறுவோருக்கு, ஆயிரம் ரூபாய் ரொக்கம் அடங்கிய, பரிசுத் தொகுப்பு வழங்கப்பட முடிவு செய்யப்பட்டது. 2020ஆம் ஆண்டு பொங்கலுக்கு எந்த பிரச்னையும் இன்றி, சர்க்கரை அட்டைகளுக்கும், ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, '2020ஆம் ஆண்டு, அரிசி வாங்கும் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா, ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்' என, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி, அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும், பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும், தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுத்துறை சார்பில் குளிர்சாதன வால்வோ சொகுசு பேருந்துகள் சேவையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 137 வனச்சரகர்களில் ஏழு பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.

chief-minister

மேலும், மின்சாரத்தில் இயங்கும் இ-ஆட்டோ சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த இ-ஆட்டோ, ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ., வரை செல்லக்கூடியது. முதல் கட்டமாக சென்னையில் 100 எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. பெட்ரோல், டீசலில் ஓடக்கூடிய ஆட்டோவை மின்சார ஆட்டோவாக மாற்றி, இதில் வடிவமைத்துள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: 5,8ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

Intro:Body:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு, இன்று(நவ.,29) முதல், ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி, தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் துவக்கி வைத்தார்.

தமிழக அரசின் சார்பில், ரேஷன் கடைகளில், கார்டு தாரர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் தயாரிக்கும் பொருட்களுடன், ரொக்க பணம், பரிசு தொகுப்பாக வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு பொங்கலுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலம், கரும்பு துண்டு ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இவை, அரிசி கார்டுகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட நிலையில், முதல் முறையாக, அனைத்து கார்டுகளுக்கும் வழங்குவதாக, அரசு அறிவித்தது.

வசதி படைத்தவர்களுக்கு, பணம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், எந்த பொருளும் வாங்காத, 45 ஆயிரம் கார்டுதாரர்கள் தவிர, அரிசி, சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. வரும் பொங்கலுக்கு, எந்த பிரச்னையும் இன்றி, சர்க்கரை கார்டுகளுக்கும், ரொக்கம் வழங்க முடிவு செய்த அரசு, அதற்காக, 10.19 லட்சம் சர்க்கரை கார்டுகளை, அரிசி கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என, ஏற்கனவே அறிவித்து உள்ளது.

இதைத் தொடர்ந்து, 'இந்த ஆண்டு, அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ள, அனைத்து குடும்பங்களுக்கும், தலா, 1,000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி, அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு இன்று முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. இன்று காலை, சென்னை தலைமை செயலகத்தில், அரிசி கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, 14 குடும்பங்களுக்கு அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். மேலும், பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும், முதல்வர் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுத்துறை சார்பில் குளிர்சாதன வால்வோ சொகுசு பேருந்துகள சேவையையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 137 வன சரகர்களுக்கு பணி நியமன செய்யப்பட்டுள்ளனர். இதில் 7 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

மின்சாரத்தில் இயங்கும் இ-ஆட்டோ சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த இ-ஆட்டோ, ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ., வரை செல்லக்கூடியது. முதல் கட்டமாக சென்னையில் 100 எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. பெட்ரோல், டீசலில் ஓடக்கூடிய ஆட்டோவை மின்சார ஆட்டோவாக மற்றி வடிவமைத்துள்ளன. முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொண்டு இருந்த போது, துபாயில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இ-ஆட்டோ சேவையை தமிழகத்தில் இன்று துவங்கப்பட்டுள்ளது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.