முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், மதுரை மாவட்டம், வாரணாசி - கன்னியாகுமரி சாலை, காளவாசல் சந்திப்பில் 54 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை காணொலி மூலம் திறந்துவைத்தார்.
மேலும், நாமக்கல், திருப்பத்தூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், திருவள்ளூர், மதுரை, சென்னை ஆகிய மாவட்டங்களில் 211 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு பாலங்கள், ரயில்வே கடவிற்கு மாற்றாக இரண்டு சாலை மேம்பாலங்கள், இரண்டு சாலைப் பணிகள், பல்வழி பரிமாற்ற மேம்பாலம், வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை, சென்னை பயிற்சி மையக் கட்டடம் ஆகியவற்றையும் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பல்வேறு கட்டடங்கள் பாலங்கள் திறப்பு!