ETV Bharat / city

கரோனா மூன்றாவது அலை முன்னேற்பாடு - ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர்! - Tamil news

கரோனா மூன்றாம் அலை முன்னேற்பாடு பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
author img

By

Published : Jun 29, 2021, 4:04 PM IST

சென்னை: இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று(ஜூன்.29) வெளியிட்டுள்ள அறிவிப்பில்," கரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில், நிதி வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று இன்று(ஜூன்.29) வரை ரூ.353 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறே, இதுவரை பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலம் கொண்டு வருவதற்கு தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும் பயண்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ரூ.50 கோடி வழங்கிடவும், இரண்டாவது கட்டமாக கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாள்தோறும் 1.6 லட்சம் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில்கொண்டு, ஆர்டிபிசிஆர் கிட்-களை வாங்குவதற்கு ரூ.50 கோடி வழங்கிடவும் முதலமைச்சர் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.

இதனையடுத்து, சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு ரூ.41.40 கோடியும், கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு ரூ.25 கோடி ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டிருந்தார்.

தற்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், இந்தத் தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அமல்படுத்த உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.