ETV Bharat / city

கொளத்தூர் தொகுதியில் மறுகுடியமர்வு செய்யப்பட உள்ளவர்களுக்கு கருணைத் தொகை வழங்கிய முதலமைச்சர்

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட இராஜா தோட்டம் திட்டப்பகுதியில், மறுகுடியமர்வு செய்யப்படவுள்ள 84 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையையும் தற்காலிக ஒதுக்கீடு ஆணைகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

மறுகுடியமர்வு செய்யப்படவுள்ளவர்களுக்கு  கருணைத் தொகை வழங்கிய முதலமைச்சர்

author img

By

Published : Aug 30, 2022, 2:06 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட இராஜா தோட்டம் திட்டப்பகுதியில் இன்று(ஆக. 30) மறுகுடியமர்வு செய்யப்படவுள்ள 84 குடியிருப்புதாரர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கருணைத் தொகையாக தலா ரூ .24,000 வீதம் மொத்தம் 20.16 லட்சம் ரூபாய்கான காசோலைகளையும், தற்காலிக ஒதுக்கீடு ஆணைகளையும் இன்று (ஆகஸ்ட் 30) வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹிதேஸ்குமார் எஸ்.மக்வானா, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ், ஆகியோர் கலந்து கொண்டனர் .

இதையும் படிங்க: மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்ட தொடக்க விழா... பங்கேற்க உள்ள டெல்லி முதலமைச்சர்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.