சென்னை: திருமுல்லைவாயலில் உள்ள பிரேம்குமார் என்பவரது வீட்டின் தண்ணீர் தொட்டி நீண்ட நாள்களாக சுத்தம் செய்யாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், இன்று (ஏப். 14) பிரேம்குமார் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கினார். சிறிது நேரத்தில் அவருக்கு விஷவாயு காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைக்கண்ட அவரது மகன் பிரதீப் குமார், பக்கத்து வீட்டுக்காரர்களான சாரநாத், பிரமோத் குமார் இருவருடன் உள்ளே இறங்கினார். இவர்களுக்கும் மயங்கி விழுந்துள்ளனர். உடனே அக்கம் பக்கத்தினர் நான்கு பேரையும் மீட்டு, மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், பிரேம்குமார், பிரதீப் குமார், பிரமோத்குமார் மூன்று பேரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். சாரநாத் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், தண்ணீர் தொட்டியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் கழிவு நீர் தொட்டியில் கலந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:SPECIAL - மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் துயரம்.. பச்சிளம் பிஞ்சுகளின் மரணம் அதிகரிப்பு... காரணம் என்ன?