சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கான இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்குத் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பின்படி சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் 61 உதவிப் பேராசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யவுள்ளனர். இத்தகைய உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வித் துறையில் 120 நாள்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் ஒரு பருவம் அல்லது நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும்வரை பணியில் இருப்பர்.
தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக NET / SLET / SET அல்லது Ph.D. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியானவர்கள் www.ide.unom.ac.in இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திசெய்து வரும் ஜனவரி 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இவர்களுக்கு மாதம் தொகுப்பூதியமாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி நேர்காணல் நடத்தி தேர்வுசெய்யப்படுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தக்காளி விலை குறையவில்லையே! - நீதிமன்றம் கவலை