இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 90 ஆயிரத்து 412பயணிகள் வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
அவர்களில் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பினை ஐயாயிரத்து 80 பேர் முடித்துள்ளனர். தற்போது 86 ஆயிரத்து 342 பயணிகள் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் தொற்று அதிக அளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 105 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் மருத்துவமனையில் தனி வார்டில் ஆயிரத்து 580 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மூன்று ஆயிரத்து 684 பயணிகளின் ரத்தப்பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன.
இவர்களில் 411 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 789 பேருக்கு நோய்தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது . 484 நபர்களின் இரத்தம், சளி பரிசோதனை ஆய்வகங்களில் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏழு நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆயிரத்து 103 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் ரத்தப்பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன. டெல்லி கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களில் நேற்று வரை 264 பேருக்கும், இன்று 100 பேருக்கும் என 364 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான வென்டிலேட்டர் ஆயிரத்து 396, 23 ஆயிரத்து 689 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன.
டெல்லி கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களில் இன்று நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் சென்னை மாவட்டத்தில் 32 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவரும், நாமக்கல் மாவட்டத்தில் மூன்று பேரும், சேலம் மாவட்டத்தில் இரண்டு பேரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 26 பேரும், தேனி மாவட்டத்தில் ஒருவரும் ,விழுப்புரம் மாவட்டத்தில் 10 பேரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஐந்து பேரும், கரூர் மாவட்டத்தில் மூன்று பேரும், திருவாரூர் மாவட்டத்தில் ஐந்து பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 6 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் ஒருவரும் என 100 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.
கரோனா தொற்று உறுதியாகியுள்ள 27 மாவட்டங்களின் நிலவரம்
எண் | மாவட்டம் | பாதிப்பு |
---|---|---|
01 | சென்னை | 32 |
02 | திருநெல்வேலி | 29 |
03 | ஈரோடு | 32 |
04 | கோயம்புத்தூர் | 29 |
05 | தேனி | 21 |
06 | நாமக்கல் | 21 |
07 | செங்கல்பட்டு | 18 |
08 | திண்டுக்கல் | 43 |
09 | கரூர் | 20 |
10 | மதுரை | 15 |
11 | திருப்பத்தூர் | 10 |
12 | விருதுநகர் | 11 |
13 | திருவாரூர் | 12 |
14 | சேலம் | 08 |
15 | ராணிப்பேட்டை | 05 |
16 | கன்னியாகுமரி | 05 |
17 | சிவகங்கை | 05 |
18 | தூத்துக்குடி | 09 |
19 | விழுப்புரம் | 13 |
20 | காஞ்சிபுரம் | 04 |
21 | திருவண்ணாமலை | 02 |
22 | ராமநாதபுரம் | 02 |
23 | திருவள்ளூர் | 01 |
24 | வேலூர் | 01 |
25 | தஞ்சாவூர் | 01 |
26 | திருப்பூர் | 01 |
27 | நாகப்பட்டினம் | 05 |