ETV Bharat / city

இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் 'செஸ் ஒலிம்பியாட் 2022' போட்டிகள் - Chennai to host the 2022 Chess Olympiad

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் 'செஸ் ஒலிம்பியாட் 2022' போட்டிகள் இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் நடைபெற உள்ளது.

chennai-to-host-the-2022-chess-olympiad
chennai-to-host-the-2022-chess-olympiad
author img

By

Published : Mar 16, 2022, 8:36 AM IST

Updated : Mar 16, 2022, 11:13 AM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த செய்தியை அகில இந்திய செஸ் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

உக்ரைன்-ரஷ்யா போர் சூழ்நிலை காரணமாக ஒலிம்பியாட் 2022 செஸ் போட்டியை ரஷ்யாவிலிருந்து வெளியேற்றுவதாக சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவித்தது. இந்த வாய்ப்பை பல நாடுகள் பயன்படுத்த முயற்சித்தன. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடைய முயற்சியால், தமிழ்நாடு அரசின் அனைத்து மட்ட அதிகாரிகள் மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (AICF) குழு ஒருங்கிணைப்புடன் இந்நிகழ்வு சாத்தியமானது.

இந்த ஏலம் கோருவதற்கான கோரிக்கையுடன் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முதலமைச்சர் அலுவலகத்தை அணுகிய சில மணிநேரங்களில் அனைத்து ஒப்புதல்களையும் தமிழ்நாடு அரசு வழங்கியது.

1927ஆம் ஆண்டு முதல் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திவருகிறது. இதுவரை 43 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் ஒரு முறை கூட இந்தியாவில் நடைபெற வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் 44ஆவது போட்டி சென்னையில் நடப்பதில் தமிழ்நாடு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

இந்த போட்டியில் 200 நாடுகளை சேர்ந்த 2,000 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் போட்டி நடைபெறுவதால் பல இந்திய அணிகள் பங்கேற்கக் கூடிய வாய்ப்பும் அமையும்.

தமிழ்நாடு அரசு செஸ் விளையாட்டிற்கு தனி கவனம்

தமிழ்நாடு அரசு எப்போதும் செஸ் விளையாட்டிற்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்து வருகிறது. அந்த வகையில் பள்ளிகளில் சதுரங்கத்தை ஊக்குவித்தல், சதுரங்கப் போட்டிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், செஸ் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் எனப் பல்வேறு வழிகளில் சதுரங்க விளையாட்டுப் போட்டியை ஊக்குவித்து வருகிறது. முன்னதாக இந்த போட்டிகளில் தங்கம், வெண்கலம் வென்ற தமிழ்நாட்டின் 14 வீரர்களுக்கு கடந்தாண்டு தமிழ்நாடு அரசு சார்பில் ரொக்கப் பரிசு ரூபாய் 1 கோடியே 98 லட்சம் வழங்கப்பட்டது.

இதுபோன்ற ஊக்குவிப்புகள் காரணமாக இந்தியாவின் 73 கிராண்ட் மாஸ்டர்களில் பிரக்ஞானந்தா, குகேஷ், அதிபன், ஸ்ரீநாத், உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் போன்ற கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளனர். இன்னும் எதிர்காலத்தில் அதிகமான கிராண்ட் மாஸ்டர்கள் கிடைப்பார்கள். இந்த செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் 26 ஜூலை 2022 முதல் ஆகஸ்ட் 8 2022 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 75 Years of Freedom: காந்தியின் பயணம் - போர்பந்தர் To தென்ஆப்ரிக்கா

Last Updated : Mar 16, 2022, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.