ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால் இன்று முதல் பணியை புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் முதுகலை மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இருதயவியல் முதுகலை மருத்துவ மாணவர் அன்பரசு, ”கரோனா சிகிச்சை அளிக்கும் பணியில் மருத்துவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் பணியை புறக்கணிக்கப் போவதாக தவறான தகவல் வெளியாகியுள்ளது.
எங்களுக்கு சில பிரச்னைகள் இருந்தது குறித்து முதலமைச்சரிடமும், மருத்துவக் கண்காணிப்பாளரிடமும் எடுத்துக் கூறினோம். தற்போது அப்பிரச்னைகளை சரி செய்து கொடுத்துள்ளனர். இதுபோன்ற இக்கட்டான காலத்தில் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு நாங்கள் மேலும் உற்சாகத்துடன் பணி புரிவோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசைப் பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர்