சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் பேக்கரி உரிமையாளர் காசி விஷ்வநாதன்(52). ஆதம்பாக்கம், பிருந்தாவன் நகரில் உள்ள அவரது பேக்கரியில் நேற்றிரவு கடையை பூட்டிச்சென்ற காசி விஷ்வநாதன் மீண்டும் இன்று (ஆக.16) காலை போய் திறந்தார். அப்போது அதிர்ச்சிக்குள்ளானார்.
முன்னதாக, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் கல்லாவில் இருந்த ரூ.70,000 பணம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்குச்சென்று ஆய்வு செய்து சிசிடிவி காட்சிகளைக்கைப்பற்றினர். அதில் அடையாளம் தெரியாத நபர் இருவர் வந்துசெல்வது பதிவாகியிருந்ததன் அடிப்படையில் அவர்களைப் போலீசார் வலைவீசித்தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொள்ளையடிக்கப்பட்ட அரும்பாக்கம் வங்கி நகைகள் உருக்கப்பட்டதா.. போலீசார் விசாரணை