திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அதன் தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட 58-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நேற்று மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து தொடங்கி, ராஜரத்தினம் திடல்வரை நடத்தப்பட்ட இப்பேரணியில், சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்தப் பேரணியில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்கள் முத்தரசன், கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ஒரு வரலாற்று மைல்கல்’ - திருமாவளவன்