ETV Bharat / city

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டம் - பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் காவல்துறையினர்! - பாதுகாப்பு

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக மாநகர் முழுவதும் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

security
security
author img

By

Published : Dec 30, 2019, 7:54 PM IST

நாளை நள்ளிரவு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி மெரினா கடற்கரை, கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவர். எனவே, பாதுகாப்புப் பணியில் சுமார் 15 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பல்வேறு பாதுகாப்புப் பணிகளிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது.குறிப்பாக,

  • திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, கீழ்ப்பாக்கம், புளியந்தோப்பு, அயனாவரம் உள்ளிட்ட 368 இடங்களில், காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளனர். வழிபாட்டு இடங்கள் உள்ளிட்டவை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தபட்டுள்ளன.
  • சென்னையில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் ஐந்து முதல் பத்து வண்டிகள் வரை பாதுகாப்புப் பணியில் இருக்கும். மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மணலில் செல்லக்கூடிய ஏடிவி எனப்படும் வாகனமும் பாதுகாப்பு பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
    பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர்
    பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர்
  • 25 குழுக்களாக காவல்துறையினர் பிரிக்கப்பட்டு பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்காணிக்கின்றனர். அவ்வாறு குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்குபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அவர்களின் கடவுச் சீட்டு சரிபார்த்தலின்போது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதை குறிப்பிட காவல்துறை முடிவு.
  • மக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலன் கருதி அலைபேசி வாயிலாக கண்காணிக்கும் குழு அமைப்பு.
  • கடற்கரை வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் திரும்பிப்போக மாற்றுவழி. பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு செல்லும் வழியில் வாகனங்களுக்கு அனுமதி ரத்து.

மெரினா கடற்கரை உட்புற சாலை இரவு 8 மணிக்கு மூடப்பட்டு அதிகாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புத்தாண்டையொட்டி ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

Intro:Body:சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்...*

சென்னையில் நாளை இரவு புத்தாண்டு பண்டிகை கொண்டாட உள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி காவல்துறை சார்பில் எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்கும் வண்ணம் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதிலும் குறிப்பாக திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் அடையாறு, கீழ்பாக்கம், புளியந்தோப்பு, அயனாவரம் உள்ளிட்ட 368 இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருத்தலங்கள் தேவாலயம் வழிபாட்டு தலங்கள் என மக்கள் அதிகம் கூடும் கூடிய 100 இடங்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தபட்டுள்ளது.

இதில் சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குறைந்தது ஐந்து முதல் பத்து வண்டிகள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மெரினா கடற்கரை பெசன்ட்நகர் கடற்கரை நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு நலன் கருதி மணலில் செல்லக்கூடிய ஏடிவி என்று அழைக்கக்கூடிய வாகனத்தையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி காவல்துறையினர் 25 குழுக்களாக அமைக்கப்பட்டு ரேஸில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்குப் அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர்களை பற்றிய குற்ற ஆவணங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பின்னர் பாஸ்போட் வெரிஃபிகேஷன் மற்றும் போலிஸ் வெரிபிகேஷன் பொழுது அவர்கள் குடித்து வாகனம் ஓட்டுவதை குறிப்பிடுவோம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எந்த வித குற்ற சம்பவங்களும் நிகழாமல் தடுக்கும் வகையாக மக்கள் அதிகம் கூட கூடிய இடங்களில் ஆளில்லா விமான கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்க உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலன் கருதி அலைபேசி வாயிலாக கண்காணிக்கும் குழு ஒன்று அமைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் வாயிலாக குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக புகார் தெரிவிக்கப்பட்டு அடுத்த சில நிமிடங்களில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை போன்ற கடற்கரை வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் திருப்பியும் மாற்றுவழியில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பெசண்ட்நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு செல்லக்கூடிய வழியில் வாகனங்கள் அனைத்தும் அனுமதி கிடையாது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மெரினா கடற்கரை உட்புற சாலை இரவு 8 மணிக்கு மூடப்பட்டு பின்பு அதிகாலை 4 மணி அளவில் திறக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.