கரோனா தொற்று சென்னை முழுவதும் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் மொத்தம் 35,556 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பரவலை தடுக்க அனைத்து மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 10 நாட்களாக ராயபுரத்தைவிட தேனாம்பேட்டையில் அதிக நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அங்கு பணியில் இருந்த அலுவலர்களுடனும் ஆலோசனை நடத்தினார். பின்னர், கோடம்பாக்கத்தில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை ஆய்வு செய்தார்.
மேலும், வார்டு 136இல் மாநகராட்சி, ரோட்டரி கிளப் ஆகியவற்றின் செலவில் தொடக்கி வைக்கப்பட்ட பொதுக் கழிப்பறையையும் அலுவலர்களுடன் இணைந்து ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க : சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும்!