கரோனா தொற்றால் நாளை (ஏப். 25) முழு ஊரடங்கு அமலுக்குவருகிறது. முழு ஊரடங்கு நாளில் அரசு, தனியார் பொதுப் போக்குவரத்துக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது.
மாநகரப் போக்குவரத்துக் கழகம்
இந்நிலையில், தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில், குறிப்பிட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட வழித்தடங்களில் 100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், இதில் பொதுமக்கள் யாரும் ஏறக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.