ETV Bharat / city

சென்னையில் 7ஆவது மெகா தடுப்பூசி முகாம்..! சென்னை பெருநகர மாநகராட்சி அறிவிப்பு - Dept of Family welfare

சென்னையில் கரோனோ தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தியவர்களுக்கு, இரண்டாம் தவணை தடுப்பூசிக்கான சீட்டுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

- இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
7 வது மெகா தடுப்பூசி முகாம்
author img

By

Published : Oct 29, 2021, 10:50 AM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிப்போர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு வசதியாக மாநகராட்சி பணியாளர்கள் நேரடியாக சென்று சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி போட்டவர்கள்

மாநகராட்சிக்கு உள்பட்ட, 200 வார்டுகளிலும் இன்று அக்.28 ஆம் தேதி வரையில் அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி மையங்களின் வாயிலாக 37,05,401 முதல் தவணை தடுப்பூசிகளும், 22,19,578 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் என்று மொத்தம் 59,24,979 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும், தனியார் மருத்துவமனைகளின் வாயிலாக 11,30,879 முதல் தவணை தடுப்பூசிகளும் 3,18,724 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் என்று 14,49,603 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இரண்டாவது தடுப்பூசி போடாதவர்கள்

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 4,03,594 நபர்கள் கோவிட் ஷீல்டு மற்றும் 1,87,081 நபர்கள் கோவேக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாள்களை கடந்து செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.

7ஆவது மெகா தடுப்பூசி முகாம்

சென்னை மாநகராட்சியின் சார்பில் மீண்டும் வரும் அக். 30ஆம் தேதி அன்று 1600 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன; அதில் முன்னதாக, இரண்டாம் தவணை கரோனோ தடுப்பூசி செலுத்தவேண்டிய நாள்களை கடந்தும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் தொலைபேசி வாயிலாகவும், அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசிகளுக்கான சீட்டுகள் வழங்கப்படுகின்றன. மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

மாநகராட்சி வேண்டுகோள்

எனவே, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் தொலைபேசி வாயிலாகவும், அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசிகளுக்கான சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பணிகளில் மாநகராட்சியின் மலேரியா ஒழிப்பு பணியாளர்கள், கரோனா தொற்றுக் கணக்கெடுப்பு செய்யும் களப்பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் போன்றோர் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 80,562 நபர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் தொலைபேசி வாயிலாகவும், 1,00,321 நபர்களுக்கு நேரடியாக சீட்டுகள் வழங்கப்பட்டு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய தகவல் தெரிவிக்கப்பட்டு வரும் 30ஆம் தேதி அன்று நடைபெறும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: 2025வரை குறைவாக சாப்பிடுங்க.. கொழுகொழு அதிபர் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.