சென்னையில் மெட்ரோ ரயிலில் நேற்று மட்டும் இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 792 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். ஒரே நாளில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தோர் எண்ணிக்கை இதுவே அதிகமாகும்.
சென்னை டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையேயான 10 கிமீ மெட்ரோ வழித்தடத்தை கடந்த 10-ம் தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார். இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முதல்கட்டமாக முழுமையான பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதனையடுத்து, சென்னை மெட்ரோ ரயிலின் முதல்கட்ட வழித்தடத்தில் உள்ள 32 வழித்தடங்களிலும் பயணிகள் வருகையை அதிகரிக்கும் சோதனை முயற்சியாக கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டிருந்தது.
அதன்படி நான்காவது நாளாக இன்றும் மெட்ரோவில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் எனவும், கடந்த மூன்று நாட்களில் மட்டும் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரயிலில் நேற்று மட்டும் இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 792 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். ஒரே நாளில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தோர் எண்ணிக்கை இதுவே அதிகமாகும்.