ETV Bharat / city

6 ஆண்டுகளில் 9.80 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணம்! - சென்னை மெட்ரோ - மெட்ரோ இரயில் பயணிகளின் ஒத்துழைப்புக்கு நன்றி

2021ஆம் ஆண்டில் மட்டும் 2.53 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ நிறுவனம்
சென்னை மெட்ரோ நிறுவனம்
author img

By

Published : Jan 6, 2022, 9:10 AM IST

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஜன.5ஆம் தேதி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "மெட்ரோ ரயில் நிறுவனம் தனது மெட்ரோ ரயில் சேவையைக் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 29 முதல் சென்னையில் தொடங்கியது.

இதுவரை சென்னையிலுள்ள மக்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும், சென்னை மெட்ரோ இரயில் ஒரு நம்பகமான, பாதுகாப்பான போக்குவரத்து வசதியைச் செய்து வருகிறது. இதனால், மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டில் மட்டும் 2.53 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார்கள். இதைத் தவிர்த்து, பயணிகளின் வசதிக்காக 12 இணைப்புச் சிற்றுந்து சேவைகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கியதிலிருந்து நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆண்டு வாரியாகப் பயணித்தவர்களின் எண்ணிக்கை

மேலும், "கடந்த 2015 முதல் 2018 வரை 2,80,52,357 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டில் 3,28,13.628 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளார்கள்" என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

"கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடைபிடிக்கப்பட்ட பொது முடக்கத்தினால், சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மட்டும் 1,18.56,982 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், மீண்டும் கரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை மெட்ரோ ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும் 2,53,03,383 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பயணிகளின் ஒத்துழைப்புக்கு நன்றி

குறிப்பாக, "இதுவரை சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஆறு ஆண்டுகளில் அதாவது, 2015ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 9,80,26,350 கோடி பயணிகள் பயணித்துள்ளார்கள். மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களைப் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவும் அணிந்திருப்பதுடன் தகுந்த இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: TNPSC Exams: தள்ளிப்போகும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.