இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் "தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 15 செ.மீ மழையும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், திருச்சி மாவட்டம் முள்ளம்பாடியில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.
சென்னையை பொருத்தவரையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வடதமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரை பகுதியில் மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகம்வரை காற்று வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் மேற்கூரிய பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
ஜூன் மாதம் முதல் தற்போது வரை பதிவான மழையை பொருத்தவரையில் தூத்துக்குடியில் இயல்பைவிட குறைவாக பதிவாகியுள்ளது" எண்றார்.