இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இடி மின்னல் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் மாவட்டங்களில் மழை:
வரும் மே 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை அதாவது அடுத்த நான்கு நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.
வெப்பநிலை மாற்றம்:
மே 12, 13 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.
மே 11 முதல் 13 வரை மேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் கடலோர, அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூட்டும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
கர்நாடக கடலோர பகுதி, கேரளா கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறியுறுத்தப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.