ETV Bharat / city

ஃபாத்திமா கொலை செய்யப்பட்டிருக்கலாம் - தந்தை அப்துல் லத்தீப் சந்தேகம்

சென்னை: ஐஐடியில் தனது மகள் ஃபாத்திமா லத்தீப் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுவதாக மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.

abdul lattif
abdul lattif
author img

By

Published : Dec 6, 2019, 8:17 PM IST

கேரளாவைச் சேர்ந்த ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் கடந்த மாதம் சென்னை ஐஐடி வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்தத் தற்கொலை வழக்கை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

இந்த விசாரணையில், ஃபாத்திமா லத்தீப் அவருடைய அலைபேசியில் பதிவிட்டிருந்த தற்கொலைக் குறிப்புகள் உண்மையானவைதான் என தடயவியல் நிபுணர்கள் அறிக்கையளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஃபாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப், டெல்லி சென்று பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தும் மகள் மரணம் தொடர்பாக மனு அளித்தார்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தியை சந்தித்தபின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அப்துல் லத்தீப், “என் மகளின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் விசாரணைக்குப் பிறகு எழுந்துள்ளது. அவர் மரணம் அடைந்தவுடன் அங்கு வந்த கோட்டூர்புரம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு குறைகள் உள்ளன. இந்த விவகாரத்தில் சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்கள், ஏழு மாணவர்களுக்கு தொடர்பு இருக்கிறது. ஆனால், அவர்களிடம் கோட்டூர்புரம் காவலர்கள் முறையாக விசாரணை நடத்தவில்லை.

ஃபாத்திமா இறந்த நாளன்று, அங்கு பிறந்தநாள் விழா நடந்திருக்கிறது. அதுதொடர்பாக விசாரிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. எனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தால் நாக்கும் கண்ணும் வெளியே வந்திருக்கும், ஆனால் அதுபோன்று எதுவும் இல்லை.

ஃபாத்திமா லத்தீப் தந்தை அப்துல் லத்தீப் பேட்டி

எந்த ஒரு நிகழ்வையும் எழுதி வைத்து பெயரைக் குறிப்பிட்டுவைக்கும் பழக்கம் கொண்ட என் மகள், தனது இறப்பிற்கு காரணமானவர்கள் பற்றி எழுதிய கடிதம் கண்டிப்பாக இருக்கும், ஆனால் அதை காவல் துறையினர் கண்டுபிடிக்கவில்லை. சிசிடிவி காட்சிகளையும் முறையாக ஆய்வு செய்யவில்லை, உடற்கூறாய்வையும் பதிவு செய்யவில்லை.

எனவே, எனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற ஐயம் எனக்கு எழுந்துள்ளது. இந்த அனைத்து சந்தேகங்களையும் பிரதமர், உள் துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன்.

இவ்வழக்கு மிகவும் சிக்கலாக உள்ளது. உறுதியான ஆதாரங்களோடு தொடர்புடைய நபர்களை பிடிக்க விசாரணை நடத்திவருவதாக, வழக்கை விசாரிக்கும் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார் “ எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஐஐடியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி - டாக்டர்.ஸ்வராஜ் வித்வான் குற்றச்சாட்டு

Intro:Body:சென்னை ஐஐடி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பாத்திமா லதீப் செல்போனில் பதிவிட்ட பதிவுகள் உண்மைதான் என தடயவியல் நிபுணர்களும் அறிக்கையை தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பாத்திமா லத்திப்பின் தந்தை அப்துல் லத்தீப் பாரதப் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துள்ளார். தனது மகள் மரணம் தொடர்பாக மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசும்போது தன் மகளின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் விசாரணைக்குப் பிறகு எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் தனது மகள் மரணம் அடைந்தவுடன் கோட்டூர்புரம் போலீசார் விசாரணையில் பல்வேறு குறைகளை சுட்டிக் காட்டியுள்ளார்.தனது மகள் மரணம் அடைந்த விவகாரத்தில் மூன்று பேராசிரியர்கள் மற்றும் 7 மாணவர்கள் தொடர்பு இருப்பதாகவும் அவர்களிடம் கோட்டூர்புரம் போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.தனது மகள் இறந்த தினத்தன்று பிறந்தநாள் விழா நடந்ததாக தெரிவித்த அவர், இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் கோட்டூர்புரம் போலீசார் விசாரணையில் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தால் நாக்கும் கண்ணும் வெளியே வந்து இருக்கும் என்றும், அதுபோன்று இல்லை என தெரிவித்துள்ளார்.எந்த ஒரு நிகழ்வையும் எழுதி வைத்து பெயரைக் குறிப்பிடும் தனது மகள்,தனது இறப்பிற்கு காரணமானவர்கள் பற்றி எழுதிய கடிதம் கண்டிப்பாக இருக்கும் எனவும் அதை போலீசார் கண்டுபிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். எனது மகளின் உடலில் வேறு ஏதேனும் மருந்து செலுத்தப்பட்டு உள்ளதா என போலீசார் பிரேத பரிசோதனையின்போது ஆய்வு செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். சிசிடிவி காட்சிகளை முறையாக ஆய்வு செய்யப்படவில்லை எனவும் பிரேதப் பரிசோதனையும் வீடியோ செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த அனைத்து சந்தேகங்களையும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாகவும் அப்துல் லதீப் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா முழுவதும் ஐஐடி மற்றும் என் ஐ டி கல்வி நிறுவனங்களில் நடக்கும் மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை செய்யும் என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும் தனது மகள் வழக்கு மிகவும் சிக்கலாக உள்ளதாகவும், உறுதியான ஆதாரங்களோடு தொடர்புடைய நபர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருவதாக, வழக்கை விசாரிக்கும் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளதாக பாத்திமா லதாவின் தந்தை அப்துல் லத்தீப் கூறியுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.