சென்னை: இந்தியாவின் ஊரகப் பகுதியில் குறைந்த செலவில் 5ஜி நெட்ஒர்க் சேவை தொடர்பை சிறந்த முறையில் அளிப்பதற்கான ஆராய்ச்சியில் இவை ஈடுபட உள்ளன. ஊரகப் பகுதி தகவல் தொழில்நுட்ப தொடர்புக்கு 5ஜி அடிப்படை நிலையத்தை குறைந்த செலவில் உருவாக்குவதே முக்கிய நோக்கமாகும்.
இது குறித்து எல்டிஐ தலைமை செயல் அலுவலரையும், நிர்வாக வாரிய உறுப்பினருமான நசிகேத் தேஷ்பாண்டே, “நவீன சமூகத்தை உருவாக்குவதற்கான அடுத்த நிலை கண்டுபிடிப்புக்கு 5ஜி உறுதி அளிக்கிறது. இந்த பயன்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் கிடைப்பதை உறுதி செய்வது முக்கியமானது.
சென்னை ஐஐடி-யுடன் எல்டிஐ பங்குதாரராக இருப்பது இந்தியாவின் தொலை தூரப் பகுதிகளில் உள்ள மக்களையும் சிறந்த முறையில் இணைப்பதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதாகும்.
இந்தத் திட்டம் எல்டிஐ-யின் பெரு நிறுவன, சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் முதல்கட்டம் என்றும், இது இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பில் உள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாகும்” என்றார்.
தொடர்ந்து, “சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன்கள் பற்றி கூறிய பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா, சென்னை ஐஐடியின் 5ஜி சோதனைக்களுக்கான திட்டம் இந்திய புதிய தொழில்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்தில் விரைந்து முன்னேறுவதற்கான முயற்சியை ஊக்கப்படுத்தும்” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பூரில் 4 நாள்களாக போக்குக் காட்டிய சிறுத்தை பிடிபட்டது!