ETV Bharat / city

உணவு விடுதியில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு! - உயிரிழப்பு

சென்னை: தனியார் உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உணவக சமையலர் உயிரிழந்துள்ளார்.

fire
fire
author img

By

Published : Jan 3, 2020, 3:17 PM IST

அண்ணாநகரில் பாரம்பரியம் என்ற பெயரில் தனியார் உணவு விடுதி இயங்கிவருகிறது. இன்று அதிகாலையில் விடுதியின் பெயர்ப் பலகையில் மின்கசிவு காரணமாக தீ பற்றியுள்ளது. பின்னர் தீ மளமளவென உணவகம் முழுவதும் பரவியதையடுத்து, ஊழியர்கள் அனைவரும் உடனடியாக உணவகத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஆனால், உணவக சமையலரான திருநெல்வேலியைச் சேர்ந்த, வெனிட் சகாயம் மட்டும் கழிவறையில் இருந்துள்ளார். உணவகம் முழுவதும் தீ பரவியிருந்ததால், சகாயம் உள்ளேயே புகைமூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.

விபத்து குறித்து தகவலறிந்த ஜெ.ஜெ. நகர் தீயணைப்புத் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்துவந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் மயங்கிக் கிடந்த சகாயத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அப்போது, சகாயத்தை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

மின்கசிவால் தீ விபத்து - சமையலர் உயிரிழப்பு

இவ்விபத்து தொடர்பாக அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: சிகரெட்டுக்காக அண்ணனை கொலை செய்த தம்பி!

Intro:Body:அண்ணாநகரில் தனியார் உணவு விடுதியில் தீ விபத்து .ஒருவர் உயிரிழப்பு.

சென்னை அண்ணாநகரில் பாராம்பரியம் என்ற தனியார் உணவு விடுதி இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் விடுதியின் பெயர் பலகையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டுள்ளது. பின்னர் தீயானது பரவி பாரம்பரியம் உணவகம் முழுவதும் பரவி உள்ளது.இதனை கண்ட உணவக ஊழியர்கள் அனைவரும் உணவகத்தை விட்டு வெளியேறி உள்ளனர். ஆனால் உணவக சமையல்காரரான திருநெல்வேலி பகுதியை சேர்ந்த வெனிட் சகாயம் மட்டும் கழிவறையில் இருந்துள்ளார். மேலும் தீப்பரவி இருந்ததால் சகாயம் உள்ளேயே சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி உள்ளார்.

இதனை பற்றி தகவல் அறிந்த ஜெ.ஜெ நகர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சுமார் 2 மணி நேரமாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.பின்னர் மயங்கி கிடந்த சகாயத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அப்போது சகாயத்தை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கெனவே மூச்சு திணறி இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.மேலும் இந்த விபத்து தொடர்பாக அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.