கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் பேசக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் உதகை நீதிமன்றத்தில் வழக்கு முடியும்வரை கொடநாடு விவகாரம் குறித்து இருதரப்பினரும் பேசக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் அமைந்திருக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.