ETV Bharat / city

மீனவர்கள் நிவாரணத் தொகை வழக்கு - பல்வேறு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்! - மீன்வர்கள் நிவாரண தொகை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் கண்காணிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Chennai High court on Fisheries subsidy
Chennai High court on Fisheries subsidy
author img

By

Published : Feb 7, 2020, 12:25 PM IST

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை மெரினா கடற்கரையிலுள்ள கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை நடைபாதை அமைப்பது தொடர்பாக, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், லூப் சாலையில் புதிதாக கட்டவுள்ள மீன் அங்காடியின் கட்டுமானப் பணிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். மேலும், லூப் சாலையில் மாலை 3 மணிக்கு மேல் மீன் விற்பனை நடப்பதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அப்பகுதியில் 24 மணி நேரமும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருப்பதை கண்காணிக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கும், மாநகர காவல் துறைக்கும் உத்தரவிட்டனர்.

மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர், போக்குவரத்து காவல் இணை ஆணையர் ஆகியோரை பிப்ரவரி 21ஆம் தேதி நேரில் ஆஜராகும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அதிமுகவின் இரட்டை தலைமைக்கு எதிரான வழக்கு - ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Intro:Body:சென்னை மெரினாவில் உள்ள களங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையான லூப் சாலை போக்குவரத்து இடையூறு இல்லாமல் கண்காணிக்கும்படி அறிவுறுத்தி, சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர், போக்குவரத்து காவல் இணை ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, லூப் சாலையில் மீன் விற்பனையை ஒழுங்குபடுத்துவது குறித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மெரினா கடற்கரையில் கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை நடைபாதை அமைப்பதுதொடர்பாக, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், லூப் சாலையில் புதிதாக கட்ட உள்ள மீன் அங்காடியின் கட்டுமானப் பணிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். மேலும், லூப் சாலையில் மாலை 3 மணிக்கு மேல் மீன் விற்பனை நடப்பதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அப்பகுதியில் 24 மணி நேரமும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருப்பதை கண்காணிக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கும், மாநகர காவல் துறைக்கும் உத்தரவிட்டனர்.

இதுசம்பந்தமாக, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகர காவல் ஆணையர், போக்குவரத்து காவல் இணை ஆணையர் ஆகியோரை பிப்ரவரி 21ம் தேதி நேரில் ஆஜராகும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.