ETV Bharat / city

அரியலூர் மாணவி கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை! - அரியலூர் மாணவி கொலை வழக்கு

17 வயதான மாணவி கொலை வழக்கின் நீதிமன்ற விசாரணைக்கு பிப்.16ஆம் தேதிவரை இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாணவி கொலை
அரியலூர் மாணவி கொலை
author img

By

Published : Feb 4, 2022, 5:44 PM IST

சென்னை : அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த பட்டியலின மாணவி 2016ஆம் ஆண்டு டிச.26ஆம் தேதி மாயமான நிலையில் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜெயங்கொண்டம் காவலர்கள் குற்றஞ்சாட்டப்பட்ட மணிகண்டன், மணிவண்ணன், ராமச்சந்திரன், திருமுருகன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சிபிசிஐடி விசாரணை கோரிக்கை

இந்த வழக்கின் மீதான விசாரணையை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க கொலையுண்ட மாணவியின் தாயார் ராஜகிளி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கை வேறு அமைப்பு விசாரணைக்கு மாற்ற மறுத்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க அரியலூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

12 சாட்சியங்கள் விசாரணை

அதன்படி விசாரணை தொடங்கி 12 சாட்சிகள் விசாரிக்கப்படுள்ள நிலையில், மேலும் சில குற்றச்சாட்டுக்களை சேர்க்க அனுமதி கோரி இரும்புலிக்குறிச்சி காவல் ஆய்வாளர் தரப்பில் அங்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை அனுமதித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகளை சேர்க்க உத்தரவிட்டது. அரியலூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இந்த வழக்கில் மூன்றாவது குற்றம்சாட்டப்பட்ட நபரான ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

குற்றச் சதியை நீக்கக் கோரிக்கை

அந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிற குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமுலத்தில் குற்றச் கூட்டுச்சதி (120-B) எனக் குறிப்பிடாத நிலையில் மீண்டும் குற்றச்சாட்டுகளை சேர்ப்பது சட்டவிரோதம் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், தடயங்களை அழித்ததாக (இபிகோ 201) மட்டுமே வழக்குப்பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் கூட்டுச்சதி என குற்றச்சாட்டை சேர்ப்பது சட்டவிரோதம் என வாதிடப்பட்டது.

தடை

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அரியலூர் நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதித்தும், காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்.16ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

பாலியல், கொலை உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு என்ன தண்டனை விதிக்கப்படுமோ, அதேபோல் தண்டனை குற்றச் சதியில் ஈடுபட்டவர்களுக்கும் விதிக்க நமது தண்டனைச் சட்டத்தில் இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பாலியல் கொடுமைகளுக்கு எதிராக சிறுவன் கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் பயணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.