ETV Bharat / city

இளவரசியின் மருமகனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சசிகலா உறவினர் இளவரசியின் மருமகன் ராஜராஜனுக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இளவரசி மருமகன் ராஜராஜனுக்கு எதிராக தொடரப்பட்ட மோசடி வழக்கு தள்ளுபடி

author img

By

Published : Mar 11, 2022, 1:28 PM IST

Updated : Mar 11, 2022, 1:40 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாகரன் என்பவர் சசிகலா உறவினரான இளவரசியின் மருமகன் ராஜராஜனுக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, அதிமுக சார்பில் சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறி ராஜராஜன் 5 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்தார்.

இதுகுறித்து காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், பணம் கொடுத்தது தொடர்பாக எந்த ஆவணங்களையும் மனுதாரர் தரப்பில் முறையாக தாக்கல் செய்யவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்

Last Updated : Mar 11, 2022, 1:40 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.