ETV Bharat / city

வனத் துறை அலுவலர்களுக்கு ஊதியம் எதற்கு? - உயர் நீதிமன்றம் கேள்வி

வாகனங்கள் மோதி வனவிலங்குகள் பலியாவதைத் தடுக்க, 2019ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை நாளை மறுநாள் (பிப்ரவரி 10) முதல் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு வனத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai High Court Question
சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
author img

By

Published : Feb 8, 2022, 2:06 PM IST

சென்னை: வனவிலங்குகள் நல ஆர்வலரும், வழக்கறிஞருமான சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில் “2013ஆம் ஆண்டு சத்தியமங்கலம் விலங்குகள் சரணாலயம் என்பது, புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்தச் சரணாலயத்தில் புலிகள் மட்டுமல்லாமல், சிறுத்தை, யானை, மான், காட்டெருமை போன்ற விலங்குகளும் இருக்கின்றன. சரணாலயத்தின் வழியே பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி வனவிலங்குகள் உயிரிழக்கின்றன.

கனரக வாகனங்களும், இலகு ரக வாகனங்களும் என ஒரு நாளைக்கு 5000 வாகனங்கள் வரை இந்தச் சாலையில் 24 மணி நேரமும் செல்கின்றன. 2012 முதல் 2021ஆம் ஆண்டுவரை 8 சிறுத்தை, ஒரு யானை, 71 மான்கள், 55 மயில்கள் என 155 வன விலங்குகள் வாகனங்கள் மோதி உயிரிழந்துள்ளன.

அதனால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வானங்கள் போக்குவரத்துக்கும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பிற வாகனங்கள் போக்குவரத்துக்கும் தடைவிதிக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது வனத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்தச் சாலையில் வாகன போக்குவரத்துக்குத் தடைவிதித்து 2019இல் ஈரோடு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்கள் எதிர்ப்பு காரணமாக நடைமுறைப்படுத்தவில்லை. ஏற்கனவே இது சம்பந்தமான வழக்கில் உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்களின் கூட்டம் நடத்தி சுமுகத் தீர்வு காண உத்தரவிட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மக்கள் எதிர்ப்பு காரணமாக, மாவட்ட ஆட்சியர் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்ற வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார் என்றபோதும் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். அதை மீறுவோரின் பெயர் பட்டியலை அளிக்க வேண்டும்.

மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் ஏற்பட்ட விலங்குகளின் மரணத்திற்கு வனத் துறை அலுவலர்களை ஏன் பொறுப்பாக்கக் கூடாது? உத்தரவை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றால் ஊதியம் எதற்கு? வனத் துறையினர், வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாக்கவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்குத் தடைவிதித்த உத்தரவை நாளை மறுநாள் (பிப்ரவரி 10) முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவரை இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் இருந்ததற்கு வனத் துறை விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: நீதியரசரின் உயர்மட்டக் குழுவை அவமானப்படுத்தும் ஆளுநர்- பேரவையில் அமைச்சர் மா சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.