ETV Bharat / city

ஆணவக் கொலையைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை- உயர் நீதிமன்றம் கண்டனம் - tamilnadu government

சென்னை: தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைகளைத் தடுக்க எடுத்த நடவடிக்கை தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தன்னுடைய அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம்
author img

By

Published : Jul 29, 2019, 4:25 PM IST

ஆணவக் கொலைகள் தொடர்பாகப் பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, ஆணவக் கொலைகளைத் தடுப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆணவக் கொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கத் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக நலத்துறையின் கீழ் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ’தமிழ்நாடு முழுவதும் 1300 காவல் நிலையங்கள் இருப்பதாகவும், அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்புப் பிரிவு அமைப்பது என்பது சாத்தியமில்லாதது’ எனவும் தெரிவித்தனர்.

ஆணவக் கொலைகளைத் தடுப்பது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு துண்டு பிரசுரம்கூட தமிழ்நாடு அரசால் வெளியிடப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தல்கள் வழங்க உதவியாளரை அனுப்பி வைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர், இந்த அறிக்கையைத் தாக்கல் செய்த உதவி ஐஜியை, நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

Intro:nullBody:தமிழகத்தில் ஆணவ படுகொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளது.

ஆணவ கொலைகள் தொடர்பாக பத்திரிக்கையில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.

அப்போது, ஆணவ கொலைகளை தடுப்பது மற்றும் தீர்வு காண்பது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆணவ கொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக நலத்துறையின் கீழ் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் 1300 காவல் நிலையங்கள் இருப்பதாகவும், அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவு அமைப்பது என்பது சாத்தியமில்லாதது எனவும் தெரிவித்தனர்.

ஆணவ கொலைகள் தடுப்பது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு துண்டு பிரசுரம் கூட வெளியிடப்படவில்லை என குறை கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தல்கள் வழங்க உதவியாளரை அனுப்பி வைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர், இந்த அறிக்கையை தாக்கல் செய்த உதவி ஐஜியை, நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.