சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோனிராஜ். இவர் மரம் அறுக்கும் வேலை செய்துவருகிறார். இவருக்கு ஒரு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் இவர் 2015ஆம் ஆண்டு சென்னையில் மழைபெய்து வெள்ளம் ஏற்பட்டபோது மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்தோனிராஜின் முதுகில் மரம் விழுந்ததில் இடுப்பெலும்பு முறிந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக வீட்டினுள் முடங்கிய அந்தோனிராஜ் மிகவும் அவதிப்பட்டுவந்துள்ளார். மேலும் வீட்டினுள் முடங்கியிருந்ததால் சுமார் 15 கிலோ எடைவரை குறைந்து அவதிப்பட்டுவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று தனது மனைவியை தேநீர் வாங்க கடைக்கு அனுப்பிவிட்டு அந்தோனிராஜ் கையில் வைத்திருந்த பிளேடால் தனது பிறப்புறுப்பை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் அந்தோனிராஜின் உடலை உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.