ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 63 ஆயிரம் காவல் துறையினர்! - பாதுகாப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் 60 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

security
security
author img

By

Published : Dec 26, 2019, 1:06 PM IST

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்க இருக்கிறது.

ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்டப் பதவிகளுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நேரத்தில் எந்த வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, காவல்துறை சார்பில், சுமார் 48,579 காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் காவல்துறை நண்பன் திட்டத்தில் பணியாற்றும் 14,500 பேர் என மொத்தமாக 63 ஆயிரத்து 79 பேர் இந்த உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை இந்தப் பாதுகாப்புத் தொடரும் எனவும் காவல்துறை இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மும்முரமாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பணிகள்!

Intro:Body:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் சுமார் 60 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக டிஜிபி அலுவலகம் தகவல்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த உள்ளனர்

தமிழகத்தில் ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி உள்ளிட்ட பதவிகளுக்கு சுமார் 2 லட்சத்துக்கும் மேலானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்

இதனைத் தொடர்ந்து தேர்தல் சமயங்களில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக காவல்துறை சார்பில் சுமார் 48,579 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களும் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் மேலும் காவல்துறை நண்பன் திட்டத்தில் பணியாற்றும் 14,500
பேர் என மொத்தமாக 63 ஆயிரத்து 79 பேர் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை பாதுகாப்பு தொடரும் டிஜிபி அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.