ETV Bharat / city

புகார்களைத் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு - சென்னை மாநகராட்சி

மழை, வெள்ளப் பாதிப்பு, மரக்கிளைகள் அகற்றம் தொடர்பான புகார்களை, இந்த வாட்ஸ்அப் எண்களின் மூலம் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
author img

By

Published : Nov 9, 2021, 11:00 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை, வெள்ளப் பாதிப்பு, மரக்கிளைகள் அகற்றம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க மாநகராட்சி வாட்ஸ்அப் எண்ணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நவம்பர்-07ஆம் தேதி முதல் பெய்த கனமழையின் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்து வந்தது. மாநகராட்சியின் சார்பில் மழைநீரை வெளியேற்ற பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், ரிப்பன் கட்டட வளாகத்தில் பருவமழை குறித்துக் கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெறவும், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப் எண்கள் அறிவிப்பு

இந்தக் கட்டுப்பாட்டு அறையில் 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 என்ற 5 தொலைபேசி எண்களும், 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணும் செயல்பட்டு வருகிறது.

மேலும், 5 இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த 1913 என்கின்ற உதவி எண் தற்பொழுது மழை, வெள்ளத்தின் காரணமாக 30 இணைப்புகளாக மேம்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.

மேலும், 9445025819, 9445025820 மற்றும் 9445025821 என்ற 3 வாட்ஸ்அப் எண்கள் கூடுதலாக இன்று (நவ.09) முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த வாட்ஸ்அப் எண்களிலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மழைநீர் தேக்கம், மரக்கிளைகள் அகற்றுதல் மற்றும் இதரப் புகார்கள் குறித்து தகவல்களைத் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கனமழை: பள்ளி, கல்லூரிக்கு இரண்டு நாள் விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.