இது குறித்து அறிவிப்பில், "சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 70 பள்ளிகள் செயல்படுகின்றன.
அந்தப் பள்ளிகளில் இரண்டு ஆயிரத்து 896 மாணவர்கள், மூன்று ஆயிரத்து 92 மாணவிகள் என மொத்தம் ஐந்து ஆயிரத்து 988 பேர் பத்தாம் வகுப்பு படித்துவந்தனர்.
அவர்கள் அனைவரும் பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக அதில் 35 பேர் 450க்கும் மேல் மதிப்பெண் பெற்றும், 170 பேர் 400க்கும் மேல் மதிப்பெண் பெற்றும், 395 பேர் 350க்கும் மேல் மதிப்பெண் பெற்றும் உள்ளனர்.
அவர்கள் அனைவரையும் சென்னை மாநகராட்சி ஆணையர் பாராட்டினார்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிளஸ் 1 முடிவுகள்- 95.30 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி!