ETV Bharat / city

முழு ஊரடங்கு - தடை மீறினால் கடும் நடவடிக்கை! - chennai

சென்னை: முழு ஊரடங்கின் போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் உத்தரவுகளை பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

down
down
author img

By

Published : Apr 25, 2020, 5:09 PM IST

Updated : Apr 25, 2020, 8:04 PM IST

சென்னை, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களில் அதிகளவில் கரோனா நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளதால், அரசு சார்பில் இது குறித்து மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது. நகர்புறங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கினால் மட்டுமே இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என அப்போது அவர்கள் அரசிடம் யோசனை தெரிவித்துள்ளனர். எனவே சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (26-04-20) காலை 6 மணி முதல் புதன்கிழமை (29-04-20) இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தரப்பில், முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டியவை குறித்தும், எவை எவை இயங்கும் என்பன குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

• மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், அவசர மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் இயங்கும்.

• அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.

• இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசியப் பணிகளுக்கு, 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

• அம்மா உணவகங்கள், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ATM) வழக்கம் போல் செயல்படும்.

• பொது வினியோகக் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள், உணவுக் கழகக் கிடங்குகள் மற்றும் அவற்றின் சரக்குப் போக்குவரத்துக் கழகம் வழக்கம் போல் செயல்படும்.

• பெட்ரோல்-டீசல் நிலையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும்.

• பால் வினியோகம், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் மற்றும் குடிநீர் வழங்கல் வழக்கம் போல் செயல்படும். உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

• முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

• ஆதரவற்றோருக்கு மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.

• ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் உரிய அனுமதி பெற்று உதவி வழங்கலாம்.

• கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

  • மளிகைக் கடைகளுக்கு அனுமதி இல்லை. மேற்கண்ட நாள்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எதற்கும் அனுமதி இல்லை.

• இறப்பு மற்றும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சைக்காக வெளியூர் பயணம் மேற்கொள்ள, இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இதர காரணங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

• பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வழக்கம்போல் செயல்படலாம்.

மேற்கண்டப் பணிகளைத் தவிர பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. இதர அரசு அலுவலகங்கள் செயல்படாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படக்கூடாது.

இக்காலக்கட்டத்தில் நோய்த்தடுப்பு பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். இப்பகுதிகளில் நாள்தோறும் இருமுறை கிருமி நாசினிகள் தெளிக்கப்படும். மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். இந்தத் தடையை யாரேனும் மீறினால், அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதாகப் பரவும் தன்மை கொண்டது என்பதால், இதனை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஊரடங்கை மக்கள் மதிக்காததே சென்னையின் இந்த நிலைக்கு காரணம் - ராமதாஸ்

Last Updated : Apr 25, 2020, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.