தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் அதன்தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. அதன் பரவலைத் தடுக்க மாநகராட்சி தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக நோய்ப் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைத் தடுப்புகள் அமைத்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்துவருகிறது. இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வெளியிலிருந்து உள்ளே யாரும் செல்லக்கூடாது என்றும், உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்லக்கூடாது எனவும் மாநகராட்சி ஊழியர்கள் அங்குள்ள மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை முழுவதும் 102ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 108ஆக உயர்ந்துள்ளது. மண்டல வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியல் பின்வருமாறு:
தண்டையார்பேட்டை - 50
திருவிக நகர் - 3
அம்பத்தூர் - 6
அண்ணாநகர் - 4
தேனாம்பேட்டை - 8
கோடம்பாக்கம் - 13
வளசரவாக்கம் - 10
அடையாறு - 10
சோளிங்கநல்லூர் - 4