ETV Bharat / city

'கரோனாவால் உயிர் துறந்தவர்களை உரிய மரியாதையுடன் வழி அனுப்புவது நமது கடமை' - கரோனா

சென்னை: கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களைக் கையாள்வதில் எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் காணொலியை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

corporation
corporation
author img

By

Published : Apr 21, 2020, 5:49 PM IST

கரோனா வைரஸ் வேகமாக பரவி நாடு முழுவதும் பலரது உயிர்களைப் பறித்து வருகிறது. அதன் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கரோனாவால் உயிரிழப்போரின் உடலை அடக்கம் செய்வதில் மாநிலம் முழுவதும் பிரச்சனைகள் எழுந்துள்ளன.

கரோனா பாதித்து இறந்தோரின் உடலைப் புதைப்பதால் நோய்ப் பரவுவதாக தவறாக எண்ணி, மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் கரோனா தொற்றுக்கு உயிரிழந்த இரு மருத்துவர்களின் உடல்களை அடக்கம் செய்ய சென்ற போது, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வேறு இடங்களில் உடல்கள் புதைக்கப்பட்டன.

மனிதாபிமானமற்ற இச்செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. அரசு உடனடியாக இதனைத் தடுக்க வேண்டுமென்றும், மக்களுக்கு இதனைப் பற்றிய தெளிவை உண்டாக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கரோனாவால் உயிர் துறந்தவர்களை உரிய மரியாதையுடன் வழி அனுப்புவது நமது கடமை - சென்னை மாநகராட்சி ஆணையர்

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கரோனாவால் இறந்தவர்களின் உடல்களைக் கையாள்வதில் எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்காணொலியில், "கரோனாவால் இறந்தவர்களின் உடலை இரண்டு அடுக்கு பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு காற்று கூட புகாத அளவுக்கு, உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தலின்படி, 8 அடி ஆழத்தில் வைரஸ் மற்றும் பாக்டீரியா வெளியில் வராத அளவுக்கு அடக்கம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கரோனாவால் உயிர் இறந்தவர்களை உரிய மரியாதையுடன் வழி அனுப்புவது நமது கடமையாகும் " எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா காலத்திலும் வென்ற மனிதநேயம் - மதவெறியர்கள் திருந்த வீரமணி வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.