ETV Bharat / city

வாக்காளர் பட்டியலின் திருத்தங்களை வாக்காளர்களே மேற்கொள்ள வலியுறுத்தல்! - how to to voter id corrections in online

சென்னை: வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை வாக்காளர்களே மேற்கொள்ள, அரசியல் கட்சியினர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

chennai corporation commissioner prakash
author img

By

Published : Sep 17, 2019, 5:33 PM IST

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை வாக்காளர்களே மேற்கொள்ளும் சிறப்புத் திட்டம் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர்கள் பட்டியலில் உள்ள தங்களது விவரங்களின் திருத்தங்களை அவர்களே சிறப்புச் செயலி மூலம் மேற்கொள்ளும் திட்டம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. அது வரும் 30ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

இதன்மூலம் வாக்காளர்கள் பட்டியலில் உள்ள அவர்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம், பாலினம் உள்ளிட்ட விவரங்களில் திருத்தங்களை அவர்களே மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக என்.வி.எஸ்.பி. (NVSP) இணையதளம், வாக்காளர் உதவி கைப்பேசி செயலி (Voter Helpline Mobile App), 1950 அழைப்பு மையம் (மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும்) வாக்காளர் உதவி மையத்தில் (voter felicitation centre) உள்ள வாக்காளர் பதிவு அலுவலகம் (electorial register office), இ-சேவை மையம் ஆகியவற்றின் மூலம் வாக்காளர்கள் தனது வாக்காளர் புகைப்பட அடையாள எண்ணை உள்ளீடு செய்து தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை பதிவேற்றம் செய்யலாம்.

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் ஆய்வு செய்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் 15ஆம் தேதியன்று வெளியிடவிருக்கும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும்.

இதன்மூலம் வாக்காளர்கள் தங்களின் விவரங்களை தாங்களே திருத்தம் செய்துகொள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Intro:Body:வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை வாக்காளர்களே மேற்கொள்ளும் சிறப்பு திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள அரசியல் கட்சியினர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை வாக்காளர்களே மேற்கொள்ளும் சிறப்பு திட்டம் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தலைமையில் இன்று மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது விவரங்களில் திருத்தங்களை அவர்களே சிறப்பு செயலி மூலம் மேற்கொள்ளும் திட்டம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடக்கிறது. இதன் மூலம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள அவர்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் மற்றும் பாலினம் உள்ளிட்ட விவரங்களில் திருத்தங்களை அவர்களே மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக N.S.V.P. வாக்காளர் உதவி கைபேசி செயலி (Voter Helpline Mobile App) 1950 அழைப்பு மையம் (மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும்) வாக்காளர் உதவி மையத்தில் (voter felicitation centre) உள்ள வாக்காளர் பதிவு அலுவலகம் (electorial register office) மற்றும் இ சேவை மையம் ஆகியவற்றின் மூலம் வாக்காளர்கள் தனது வாக்காளர் புகைப்பட அடையாள எண்ணை உள்ளீடு (input) செய்து தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றைக் கொண்டு குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறுதான் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் ஆய்வு செய்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் 15 ஆம் தேதி அன்று வெளியிடவிருக்கும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும். இதன் மூலம் வாக்காளர்கள் தங்களின் விவரங்களை தாங்களே திருத்தம் செய்து கொள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் கட்சியில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இத்திட்டத்தின் மூலம் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.