கரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் குறித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 14 நாட்களாக நடந்து வரும் இச்சோதனைகளில் சென்னை மாநகரில் நேற்றிரவுவரை சுமார் ஆயிரத்து 222 பேருக்கு சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் 617 பேருக்கு சாதாரணமான காய்ச்சல் என்றாலும் மீதமுள்ள 605 பேரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் மேலும் தொடர்ந்து வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி கரோனா தொற்று குறித்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.