ETV Bharat / city

சென்னையில் 4.5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது -ஆணையர் தகவல்! - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்திகள்

சென்னை: சென்னையில் 4.5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 4.5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ -ஆணையர் தகவல்!

author img

By

Published : Mar 20, 2021, 4:08 PM IST

20 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு 2000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று (மார்ச் 20) நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாமில் முன்களபணியளர்களுக்கு, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 50 வயதிற்குள்பட்ட இணை நோய்கள் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர். காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி இந்த முகாம் நடைபெறும்.

இந்த முகாமினை தொடங்கி வைத்தபின் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அனைத்து வார்டுகளிலும் 350 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. இதுவரை 4.5 லட்சம் நபர்களுக்கு சென்னையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சிறப்பு தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 2500-3000 பேர் வரை தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சனிக்கிழமைதோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும். பணிக்கு செல்வோர், தடுப்பு ஊசி செலுத்துவதற்கு நேரம் இல்லாதவர்களுக்கு இது போன்ற சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் முன் களப்பணியாளர்கள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். விரைவில் நந்தம்பாக்கம் வர்த்தக மையம் உள்ளிட்ட இடங்களிலும் தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்படும். 45 நாள்களுக்குள் 25-30 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவது இலக்கு, பரிசோதனையை குறைக்கவில்லை. 42% சென்னை மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் 4.5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது -ஆணையர் தகவல்!

வீடுகளில் பணி செய்பவர்கள், காவலாளிகள், ஆட்டோ ஒட்டுநர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். கபசுர குடிநீர் அளிக்கப்பட்டு வருகிறது. அம்பத்தூர், அண்ணா நகர், அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட மத்திய சென்னை பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தடுப்பூசிகள் ஒருவாரத்திற்கான இருப்பு உள்ளன" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க...இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் - உச்ச நீதிமன்றம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.