சென்னை: நாளை முதல் பல்வேறு இடங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்படவுள்ள நிலையில், மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் மெரினா கடற்கரையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது உதவி ஆணையர் லட்சுமணன் உள்பட காவல் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.