ETV Bharat / city

ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த 3பேர் கைது!

சென்னை: திருவான்மியூரில் ரூ. 10 கோடி மதிப்பீட்டிலான நிலத்தை அபகரிப்பு செய்த சகோதரர்கள் மூவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

நில அபகரிப்பு
நில அபகரிப்பு
author img

By

Published : Feb 11, 2021, 10:50 AM IST

சென்னை அடையாறு சாஸ்திரிநகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். சென்னை திருவான்மியூர், சிவகாமிபுரம் பகுதியில் இவருக்குச் சொந்தமாக சுமார் 8,138 சதுரடி நிலம் உள்ளது. அதனை அவர் சென்னை சைதாப்பேட்டை, பத்திரப்பதிவு அலுவலக ஆவணம் மூலம் 2015ஆம் ஆண்டு நீதிமன்றத்தின் வாயிலாக கிரையம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டுச்சதி செய்து அந்த நிலத்தை அபகரித்துள்ளனர். நிலத்தின் பூர்விக உரிமையாளரான கந்தசாமி கிராமனியின் வாரிசுதாரர் என திருபுரஅம்மாள் என்ற பெண்ணின் பெயரில், மயிலாப்பூர் வட்டாட்சியர் வழங்கியதுபோல் போலியான வாரிசு சான்றிதழை, அந்தப் பெண்ணின் பெயரில் மோசடியாக உருவாக்கியுள்ளனர். அதன்மூலம் பாலசுப்பிரமணியன் என்பவர் தனது பெயருக்கு அவரது தாயாரிடமிருந்து செட்டில்மென்ட் பெற்று நிலத்தினை அபகரித்துள்ளார்.

அந்த மோசடி ஆவணத்தைக் கொண்டு அவரது சகோதரர் சந்திரசேகர் என்பவருக்கு மோசடியாக பவர் கொடுத்து வெங்கடேஷின் நிலத்தை அபகரித்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் வெங்கடேஷ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப்பிரிவு காவல் துறையினர் அது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் மோசடி நடந்திருப்பது உண்மை எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியன், அவரது சகோதரர் சந்திரசேகர், மோசடி ஆவணத்தில் சாட்சியாக கையொப்பமிட்ட யோகானந்தன் ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர். அவர்கள் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: பிப். 13இல் ஏழாம்கட்ட அகழாய்வுப் பணி: தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.