சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சரவணன் (31). இவர் ராமாபுரத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். நேற்றிரவு பணியை முடித்து 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ் சாலையை கடக்கும்போது திடீரென காரின் முன் பக்கத்திலிருந்து புகை வந்துள்ளது. அதை பார்த்த சரவணன் காரில் இருந்து கீழே இறங்கியுள்ளார். அப்போது கார் தீப்பிடித்து மளவென எரியத் தொடங்கியுள்ளது. சற்று நேரத்தில் முற்றிலும் கார் எரிந்து சேதமடைந்தது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஆதம்பாக்கம் காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் காயங்களின்றி சரவணன் உயிர் தப்பினார்.