சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில், ரயில் ஓட்டுநர் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கவனக்குறைவாக இருந்ததே விபத்து ஏற்பட காரணம் என்ற வகையில், ஓட்டுநர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே துறையின் விசாரணை அறிக்கைக்கு பின்பு ஓட்டுநர் பவித்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் தகவல் அளித்துள்ளனர். விபத்து ஏற்பட்டபோது பிரேக் பிடிக்கவில்லை என தவறுதலாக ரயிலை இயக்கிய ஓட்டுநர் பவித்திரன் தெரிவித்ததாகவும், ஆனால் விசாரணையில் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை தவறுதலாக அழுத்தியது தெரியவந்திருப்பதாகவும் ரயில்வே போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: என்ன நடந்தது?