ETV Bharat / city

விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படுவது தொடர்பான ஆய்வு - சென்னைக்கு 8வது இடம்

சா்வதேச அளவில் 2021ஆம் ஆண்டில் விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படுவது பற்றிய கணக்கெடுப்பில், முதல் 20 விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை விமான நிலையம் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

author img

By

Published : Jan 3, 2022, 10:22 AM IST

chennai airport holds 8th rank
சென்னை விமான நிலையம்

சென்னை: சா்வதேச அளவில் விமானப் போக்குவரத்து, விமான நிலையங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகளை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிரியம் (Cirium) என்ற நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வுசெய்து வெளியிட்டு வருகிறது.

அந்நிறுவனம், 2021ஆம் ஆண்டில், விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் செயல்பாடுகள், விமானங்கள் புறப்பாடு, வருகை பற்றி விரிவான ஆய்வை நடத்தியுள்ளது. அந்த ஆய்வறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில், பெரிய சர்வதேச விமான நிலையங்களிலிருந்து, குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்பட்டதில், சென்னை விமான நிலையம் 89.32 சதவீதத்துடன் எட்டாவது இடம் பிடித்துள்ளது.

மொத்தம் 49 ஆயிரத்து 923 விமானங்கள் சேவை வழங்கி உள்ளன. இதில், 70 வழித்தடங்களில், 81.90 சதவீதம் விமானங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன. 28 கோடி இருக்கைகள் என்ற அடிப்படையில், பெரிய விமான நிலையங்களைக் கருத்தில் கொள்ளப்பட்டு கணக்கிடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்
8ஆவது இடம் பிடித்த சென்னை விமான நிலையம்

அதில் ஜப்பான் நாட்டில் உள்ள விமானநிலையம், விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படுவதில் 96.51 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை விமான நிலையம் 89.32 சதவீதம் பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் சென்னை சர்வதேச விமான நிலையம் மட்டுமே குறித்த நேரத்தில் விமானப் புறப்பாட்டை உறுதி செய்ததில், சர்வதேச அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

குறிப்பாக, தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடங்களில், இந்திய விமான நிலையங்களில் சென்னையைத் தவிர வேறு எந்த விமான நிலையங்களும் இடம் பெறவில்லை.

இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் மயிலாடுதுறையில் திருமணமண்டபம் திறப்புவிழா - அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.