வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலைக் கொண்டிருப்பதையொட்டி, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
chennai meteorological department director Puviyarasan
சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 11 செ.மீ மழையும், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் குமரி கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் வலிமையான சூறைக்காற்று வீச வாய்ப்பிருப்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கூறிய பகுதிகளுக்கு மீன்வர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றார்.