ETV Bharat / city

மனுதாரர்கள் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்

author img

By

Published : Oct 25, 2019, 6:53 AM IST

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கில், மனுதாரர்கள் தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 31ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

Challenging actor association election case

விஷால் அணியினர் நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் வெற்றி பெற, தகுதியான நபர்களின் வாக்குரிமைகளைத் தடுக்க தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாகத் திட்டமிட்டு மாற்றப்பட்டதாக மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து ஏழுமலை, பெஞ்சமின், கார்த்திகேயன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் கார்த்திகேயன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிய விளக்கமளிக்காமல் 61 உறுப்பினர்கள் தொழில் முறை சாராத உறுப்பினர்களாக மாற்றப்பட்டதால், நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு, உறுப்பினர் சரிபார்ப்புக்குப் பின் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

மனுதாரர் பெஞ்சமின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2017ஆம் ஆண்டு செயற்குழு முடிவில் சந்தா மற்றும் உறுப்பினர் அட்டை புதுப்பிக்க நாளிதழ்களில் செய்தி வெளியீடு செய்யப்பட்டது. சங்க விதிப்படி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் போது, தேர்தல் நடைபெறுவதை 21 நாட்களுக்கு முன்னர் சங்க உறுப்பினர்களுக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்ற விதியை கடைப்பிடிக்கப்படவில்லை.

தமிழ்நாடு நாடக கலைஞர்கள் பல்வேறு மாநிலங்களில் வேலை செய்வதால், தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய முடிவதில்லை. விஷால் அணிக்கு ஆதரவான தொழில்முறை சாராத உறுப்பினர்கள், தொழில்முறை உறுப்பினராகவும், எதிரானவர்கள் தொழில்முறை உறுப்பினரிலிருந்து தொழில்முறை சாராத உறுப்பினர்களாகவும் மாற்றப்பட்டனர்.

விஷால் அணியினர் நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அவருக்கு எதிரான உறுப்பினர்களின் வாக்குகளைத் தடுக்கவே, தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், அனைத்து மனுதாரர்கள் தரப்பிலும் எழுத்துப்பூர்வமா வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 31ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Intro:Body:விஷால் அணியினர் நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் வெற்றி பெற, தகுதியான நபர்களின் வாக்குரிமைகளை தடுக்க தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக திட்டமிட்டு மாற்றப்பட்டதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து ஏழுமலை, பெஞ்சமின் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் கார்த்திகேயன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிய விளக்கமளிக்காமல் 61 உறுப்பினர்கள் தொழில் முறை சாராத உறுப்பினர்களாக மாற்றப்பட்டதால் நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்து விட்டு உறுப்பினர் சரிபார்ப்புக்கு பின் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

மனுதாரர் பெஞ்சமின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2017 ம் ஆண்டு செயற்குழு முடிவில் சந்தா மற்றும் உறுப்பினர் அட்டை புதுப்பிக்க
நாளிதல்களில் செய்தி வெளியீடு செய்யப்பட்டது.

சங்க விதிப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் போது, தேர்தல் நடைபெறுவதை 21 நாட்களுக்கு முன்னர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்ற விதியை கடைபிடிக்கப்படவில்லை.

தமிழக நாடக கலைஞர்கள்
பல்வேறு மாநிலங்களில் வேலை செய்வதால்
சரியான நேரங்களில் பதிவு செய்ய முடிவதில்லை.

விஷால் அணிக்கு ஆதரவான தொழில்முறை சாராத உறுப்பினர்கள், தொழில்முறை உறுப்பினராகவும், எதிரானவர்கள் தொழில்முறை உறுப்பினரில் இருந்து தொழில்முறை சாராத உறுப்பினர்களாகவும் மாற்றப்பட்டனர்.

விஷால் அணியினர் நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்கு எதிரான உறுப்பினர்களின் வாக்குகளை தடுக்கவே தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், அனைத்து மனுதாரர்கள் தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.