ETV Bharat / city

சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது

திருவொற்றியூரில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

chain snatching thief arrested in tiruvottiyur  chennai chain snatching  chain snatching  chennai chain snatching thief arrested in tiruvottiyur  crime news  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  குற்றச் செய்திகள்  செயின் பறிப்பு  சென்னை செயின் பறிப்பு  செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது
6 பேர் கைது
author img

By

Published : Jun 30, 2021, 1:31 PM IST

சென்னை: திருவொற்றியூர் காலடிபேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார்(40), திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் நடந்து சென்றபோது, அவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், அவர் அணிந்திருந்த 4 சவரன் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக ஜெயகுமார் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனிப்படை அமைத்து சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர்.

பிடிபட்ட கொள்ளையர்கள்

இந்நிலையில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் செங்கல்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பிடிபட்டவர்கள் புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ்(21), பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜங்கிலி என்கிற ஆகாஷ்(20), செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(20), விக்கி என்கிற விக்னேஷ்(19) என தெரியவந்தது.

விசாரணையின் போது ஜெயக்குமாரின் நகையைப் பறித்தது சதீஷ், ஆகாஷ் என்பதும்,அவர்களுக்கு செங்கல்பட்டில் பதுங்க தினேஷ்குமாரும், விக்னேசும் அடைக்கலம் தந்ததும் தெரியவந்தது.

நகைகள் பறிமுதல்

இதையடுத்து திருடிய நகைகளை புதுவண்ணாரப்பேட்டையில் இருந்த சதீசின் மனைவி கவுசல்யா(23) அவரது பெரியம்மா கலா(59) ஆகிய இருவரும் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

உடனடியாக புதுவண்ணாரப்பேட்டைக்கு சென்ற தனிப்படையினர் அங்கிருந்த கவுசல்யா, கலா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 சவரன் நகை, 3 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனர்.

இதில் சதீஷ், ஆகாஷ் மீது வண்ணாரப்பேட்டை, கோட்டை, கொடுங்கையூர், பூக்கடை, ஏழுகிணறு ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் தினேஷ்குமார் மீது செங்கல்பட்டு, மறைமலை நகர் காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: போலி மருத்துவர் கைது - மருத்துவமனைக்கு சீல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.