ETV Bharat / city

’அகவிலைப்படியை நிறுத்தியது வயிற்றில் அடிக்கும் செயல் அல்லவா?’ - ஜாக்டோ ஜியோ

மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை கரோனா தாக்குதல் நேரத்தில் நிறுத்தியதற்கு கொடுத்தவரே பறித்துக் கொள்ளலாமா? என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

central
central
author img

By

Published : Apr 26, 2020, 10:17 AM IST

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளரும், ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளருமான தாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மத்திய அரசு ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரையில் உள்ள காலத்திற்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கிடையாது என்று அறிவித்து உள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

கரோனோ வைரஸ் ஒழிப்புப் பணியில் மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறை, துப்புரவுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அர்ப்பணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இத்தருணத்தில், அவர்களின் அகவிலைப்படியை நிறுத்திவைப்பது என்ற அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது எந்தவிதத்தில் நியாயம்? இது ஊழியர்கள் மீது மிகப்பெரும் தாக்குதல் ஆகும்.

இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ஓராண்டு நிறுத்தம்

இது அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிவரும் ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் செயல் அல்லவா?, ”எரிகின்ற வீட்டில் பிடுங்கியது லாபம்” என்ற நோக்கில் கரோனா தாக்குதலைவிட மிகக்கொடூரமான தாக்குதலாக மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

techer
ஆசிரியர் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கை

அரசு பெரும் முதலாளிகளிடம் வரி வசூலித்து ஈடுகட்ட வேண்டுமே தவிர, தன் ஊழியர்களிடம் வயிற்றில் அடிக்கும் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது கொடுத்தவரே பறித்துக் கொள்கின்ற செயல் அல்லவா?

அகவிலைப்படி என்னும் பஞ்சப்படி நிறுத்திவைப்பது என்ற ஆணையை பிரதமர், நிதி அமைச்சர் திரும்ப ஆணையை பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக் கொள்கிறது” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் - அரசு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.